இந்திய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடு திரும்பியுள்ளார்.
நேற்றிரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் வந்தடைந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.