புதிய விமானப்படைத் தளபதி பணிகளை ஆரம்பித்தார்
இலங்கையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று(30) பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று(30) பதவியேற்றுள்ளார்.
இலங்கை விமானப்படையின் தற்போதைய தலைமை அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, ஜனாதிபதியினால் எயார் மார்ஷல் தரத்துக்கு உயர்த்தப்பட்டதன் பின்னர் விமானப்படை தளபதியாக பதவியேற்றுள்ளார்.
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தனது ஆரம்பக் கல்வியை கம்பஹா பண்டாரவத்தை பராக்கிரம வித்தியாலயத்திலும் பின்னர் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்திலும் முடித்தார்.
அத்துடன், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.
1988 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக இலக்கம் 06 ஆட்சேர்ப்பு குழுவில் இணைந்து கொண்ட அவர் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி பட்டப்படிப்பை முடித்த பின்னர் விமானியாக இலங்கை விமானப்படையில் இணைந்தார்.
அவர் தனது சேவையின் போது ஒரு சிறந்த விமானியாகவும், போர் விமானியாகவும், போக்குவரத்து விமானியாகவும் பணியாற்றியுள்ளார்.