திருடச் சென்ற இடத்தில் குறட்டைவிட்டு தூங்கிய நபர்... எங்கு தெரியுமா?
இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சென்ற நபர், வீட்டிலுள்ள அனைவரும் உறங்காமல் இருப்பதனை கண்டு, அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கலாம் என ஒரு அறையில் மறைந்து இருந்துள்ளார்.

வீடொன்றில் திருடச் சென்ற திருடன் அந்த வீட்டிலேயே குறட்டைவிட்டு தூங்கிய விநோத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.
இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சென்ற நபர், வீட்டிலுள்ள அனைவரும் உறங்காமல் இருப்பதனை கண்டு, அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கலாம் என ஒரு அறையில் மறைந்து இருந்துள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் தன்னை அறியாமலேயே அங்கு நித்திரை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரீட்சை மீள் திருத்த பெறுபேறு வெளியானது... விவரம் இதோ!
சிறிது நேரத்தின் பின்னர் யாரோ ஒருவர் குறட்டை விடும் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அறைகளை சோதித்துள்ளனர்.
இதன் போது, அங்கு திருட வந்த நபர், குறட்டை விட்டு தூங்குவதனை கண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.