Last Shivratri of 2024: 2024 ஆம் ஆண்டின் கடைசி சிவராத்திரி மற்றும் சிறப்புகள்

மார்கழி மாத சிவராத்திரி நாளில் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகுவதுடன், இந்த யோகமானது சாதகமாக இருக்கும் ஒரு நல்ல நேரமாக கருதப்படுவதுடன், எல்லா முயற்சியும் வெற்றியை அடையும். 

டிசம்பர் 20, 2024 - 12:17
டிசம்பர் 20, 2024 - 12:18
Last Shivratri of 2024: 2024 ஆம் ஆண்டின் கடைசி சிவராத்திரி மற்றும் சிறப்புகள்

மாதாந்திர சிவராத்திரி விரதம் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி தேதியில் அனுசரிக்கப்படுவதுடன், வேத நாட்காட்டியின் படி, மார்கழி மாதத்தில் கிருஷ்ண‌ பட்சத்தின் சதுர்த்தி திதி டிசம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 3: 03 மணிக்கு தொடங்கி டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 4:01 மணிக்கு முடிவடைகிறது. 

மார்கழி மாத சிவராத்திரி நாளில் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகுவதுடன், இந்த யோகமானது சாதகமாக இருக்கும் ஒரு நல்ல நேரமாக கருதப்படுவதுடன், எல்லா முயற்சியும் வெற்றியை அடையும். 

சிவராத்திரி நள்ளிரவு பூஜை நடைபெறும். இந்த நாளில் நள்ளிரவு முகூர்த்தம் இரவு 11:56 மணி முதல் 12:51 மணி வரை‌ இந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு 55 நிமிடங்கள் மட்டுமே சுபநேரம் கிடைக்கும். அதன் பிறகு சிவபெருமானை தியானித்து விரதம் இருக்க லாம்.

பின்னர் கோயிலை சுத்தம் செய்து கங்கை நீரை தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் கோவிலில் சிவலிங்கம், சிவன் மற்றும் அன்னை பார்வதி சிலை அல்லது படத்தை நிறுவ வேண்டும்

அடுத்ததாக கங்கை நீர், வில்வம், மலர்கள் ஆகியவற்றை கொண்டு சிவலிங்கத்தை பூஜை செய்து தீப தூப ஆராதனை செய்ய வேண்டும். சிவலிங்கத்தின் முன் நெய் அல்லது எண்ணெய் விளக்கு ஏற்றி சிவ சாலிசாவை ஓத வேண்டும் அதன் பிறகு சிவபெருமானுக்கு ஆரத்தி எடுத்து மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்

மாதம் தோறும் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து தனது பக்தர்களை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் மாதந்தோறும்‌ சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதால் திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.

(இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!