பாட்டியை தாக்கி கொலை செய்த பேரன் தப்பியோட்டம்
வீடொன்றில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல, கௌடுகம பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த தாக்குதலில் 85 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.