சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது

ரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

பெப்ரவரி 20, 2025 - 16:55
பெப்ரவரி 20, 2025 - 17:03
சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை இன்று (20) தெரிவித்தார்.

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சட்டத்தரணி  போல வேடமணிந்து வந்து கொலையாளிக்கு உதவிய பெண் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!