வைத்தியசாலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்... மரணத்தில் சந்தேகம்
வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.