ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1, 2022 - 17:29
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பதிவான சில அசம்பாவித சம்பவங்களையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கல்கிஸை, நுகேகொடை மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட குறித்த ஊரடங்கு இன்று(1) அதிகாலை 5 மணிமுதல் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!