பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு... கழிவறையில் ஏற்பட்ட அதிர்ச்சி - என்ன ஆச்சு?
கழிவறையில் அமர்ந்திருந்த நபரின் பிறப்புறுப்பை 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கழிவறையில் அமர்ந்திருந்த நபரின் பிறப்புறுப்பை 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்து நாட்டில் ஒருவருக்கு பாம்பால் அதுவும் மலை பாம்பால் ஏற்பட்ட நிகழ்வு கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்த தனத் தங்தேவனோன் என்பவர் தனக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் உடன் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வீட்டின் கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அவரது பிறப்புறப்பின் விதைப்பைகளில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய வடிவத்திலான கழிவறையில் அவர் அமர்ந்திருந்தபோது அவருக்கு இந்த திடீர் வலி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனத் அந்த பதிவில்,"ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது. அது மிகவும் வலித்தது, உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க நினைத்தேன். நான் பாம்பை பிடித்ததை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அது 12 அடி மலைபாம்பு என்றும் அது தனது விதைப்பைகளை விடாமல் பற்றிக்கொண்டதாகவும், அதன் பிடியை தளர்த்தவே இல்லை எனவும் அவர் கூறினார். "நான் வேகமாக எழுந்து அதை பிடித்து இழுத்தேன். கடுமையாக வலித்தது. மிகவும் மோசமான வலி, மற்றும் கழிவறை எங்கும் ரத்தம் இருந்தது. கழிவறையில் ஒரு மலைப்பாம்பு இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில் அந்த பாம்பு அவரின் விரலையும் கடித்துவிட்டதாக அவர் கூறினார். உடனே அங்கிருந்த பாத்ரூம் பிரஷை வைத்து அந்த பாம்பின் தலையிலேயே அடித்ததை அடுத்து பிடியை தளர்த்தி உள்ளது.
தனத்தின் தொடர் தாக்குதலை அடுத்து அந்த பாம்பு உயிரிழந்தது. கழிவறை முழுவதும் பாம்பின் ரத்தமாக இருந்துள்ளது. தனத் அண்டை வீட்டாரை தொடர்புகொண்டதை தொடர்ந்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அதற்குள் தனத் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்த நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பாம்பை அங்கிருந்து அகற்றி உள்ளனர்.
ஊடகம் ஒன்றில் பேசிய தனத்,"நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும்" என்றார்.
மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித தையலும் இன்றி தனத் தப்பித்தார். தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வீடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.