துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் விமானத்துக்கு சென்ற இளைஞர் கைது
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணிகள் விமானத்தில் ஏற முயன்ற 17 வயது இளைஞருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணிகள் விமானத்தில் ஏற முயன்ற 17 வயது இளைஞருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.
நேற்று பிற்பகல் 160 பயணிகளுடன் மெல்பேர்னில் இருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த பயணிகள் விமானத்தில் ஏற முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன், விமானத்தின் ஊழியர்களால் அங்கிருந்து அகற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்க விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த இளைஞருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை முன்வைக்கவுள்ளதாக உள்ளூர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.