தமிழ் , சிங்கள புத்தாண்டு 2025 -  'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரங்கள்

தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

ஏப்ரல் 8, 2025 - 19:30
ஏப்ரல் 13, 2025 - 12:20
தமிழ் , சிங்கள புத்தாண்டு 2025 -  'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரங்கள்

தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இது சூரியப் பொங்கல் காலத்துக்குப் பின் வரும், சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் நாளாகும். இதை "சித்திரை திருநாள்" என்றும் அழைக்கிறார்கள். தமிழ் நாட்களில் இது சித்திரை மாதத்தின் முதல் நாளாகும், அதனால் இந்த நாள் தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.

புது வருடப்பிறப்பு

திருக்கணித பஞ்சாங்கம்

14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 3.21 மணிக்கு விசுவாவசு வருடம் பிறக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கம்

14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு விசுவாவசு வருடம் பிறக்கின்றது.

விஷு புண்ணியகாலம்

13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.

ஆடை நிறம்

சிவப்பு, வௌ்ளை

கை விஷேடம் பரிமாறும் நேரம்

திருக்கணித பஞ்சாங்கம்

  • 14ஆம் திகதி திங்கட்கிழமை  காலை 06.05 முதல் 07.10 மணி வரை
  • காலை 09.05 முதல் 09.55 வரை

வாக்கிய பஞ்சாங்கம்

  • 14 திங்கட்கிழமை பகல் 09 .09 முதல் 09.56 வரை
  • பகல் 9.59 இல் இருந்து  10.31 வரை
  • பிற்பகல் 4.06 இல் இருந்து 5 மணி வரை

தோஷ நட்சத்திரங்கள்

திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!