விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். 

ஜனவரி 16, 2024 - 12:04
விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். 

இதன்போது ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார். பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 

18-வது ஓவரின்போது இந்த சம்பவம் நடந்ததுடன், இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. எனினும் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அந்த நபரை பொலிஸார் பிடித்து, துகோகஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கோலியின் தீவிர ரசிகரான அந்நபர், பார்வையாளர்களின் வரிசையில் இருந்து வேலியில் ஏறி குதித்து, களத்திற்குள் நுழைந்துள்ளார். 

அவரிடம் போட்டிக்கான டிக்கெட் இருந்தது. அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!