மீண்டும் ஆரம்பமான ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள்
அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதுமுள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (மே 21) நண்பகல் 12.00 மணி முதல் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.