துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் - அமைச்சர்
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்கு காரணமான கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.