இந்தியாவில் தலைமறைவான சந்தேக நபர் கைது
குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தண்டனையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் சந்தேக நபர் என்று அவர் கூறியுள்ளார்.