சூரிய பெயர்ச்சி - இன்று முதல் ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...

சூரியன் 2023 நவம்பர் 17 ஆம் தேதி, அதாவது இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த விருச்சிக ராசியில் சூரியன் சுமார் ஒருமாத காலம் பயணிக்கவுள்ளார்.

நவம்பர் 18, 2023 - 12:04
நவம்பர் 18, 2023 - 12:05

சூரிய பெயர்ச்சி

சூரிய பெயர்ச்சி

சூரியன் 2023 நவம்பர் 17 ஆம் தேதி, அதாவது இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த விருச்சிக ராசியில் சூரியன் சுமார் ஒருமாத காலம் பயணிக்கவுள்ளார். மேலும் விருச்சிகம் செவ்வாயின் ராசியாகும். செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்களாகும். 

இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது பல ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கப் போகிறது. இப்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ள சூரியனால் அடுத்த ஒரு மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒருமாதம் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. சிலரது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை முடிந்தால் நேராக வீட்டிற்கு வருவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் நற்பெயர் தான் பாழாகும். நெருப்பு, மருந்து போன்றவற்றை இக்காலத்தில் கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். மேலும் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க இன்னும் சில காலம் ஆகும். உறவினர்களுடனான உறவு மோசமடையவிடாதீர்கள். இக்காலத்தில் அரசாங்கத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சுமூகமாக முடிவடையும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். பணிபுரிபவர்கள் தங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால், நல்ல வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள். அதிகமாக கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் அனைத்து வகையிலும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். காதல் விஷயங்களில் சற்று அலட்சியமாக இருப்பீர்கள். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளரவிடாதீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். சில விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெற்றாலும், குடும்பத்தில் பிரச்சனைகளையும், மன அமைதியின்மையையும் சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு அல்லது சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். பயணங்களால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாதம் எதிர்பாராத முடிவுகளைப் பெறுவார்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு மட்டுமின்றி, நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணமும் கைக்கு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் இனிமையாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் வேலைகள் நல்ல பாராட்டைப் பெறும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிலர் மிகுந்த நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். மாணவர்களும், போட்டியில் கலந்து கொள்பவர்களும் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும், தொண்டுகளிலும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாதம் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் திட்டங்கள் வெற்றிகரமானதாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கிய விஷயத்தில், முக்கியமாக எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் விருந்தினர்களின் வருகையால் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். பயணம் மேற்கொள்ளும் போது உங்களின் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பிடிக்காத செய்திகளைப் பெறக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அவமானப்படுத்த நினைத்தவர்களே உதவ முன்வருவார்கள். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். தைரியம் மற்றும் துணிச்சலால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். அதிக பயணங்களால் மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் முன்னேற்றத்தைக் காணலாம்.