சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். 

ஜுலை 1, 2024 - 18:00
சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். 

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அன்னாரது உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் நாளை காலை 9 மணியிலிருந்து மக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அதன்பின்னர் நாளை மறுநாள் (03) நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேலும் இறுதிக்கிரியைகள் குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிடவில்லை எனினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!