கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! 

மார்ச் 23, 2023 - 17:13
கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! 

கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மாணவர் ஒருவர் இரண்டு ஆசிரியர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் கடற்கரை நகரமான ஹாலிஃபாக்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனைக் கண்டு சக மாணவர்கள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஆசிரியரையும் குறித்த மாணவர் குத்தியுள்ளார். மேலும் அவர் தடுக்க முயன்றதால் மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாடசாலை சிறிது நேரம் பூட்டப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் மூடப்பட்டது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!