விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் இந்த வாரம் பதவி விலகுவாரா?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த தகவல் வெறும் ஊகமா அல்ல உண்மையா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.