வரவு - செலவுத் திட்டம் 2024 (நேரலை)

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

நவம்பர் 13, 2023 - 16:43
நவம்பர் 13, 2023 - 18:29

வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை

வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

சம்பளத்தை நினைத்தைப்படி அதிகரிக்க முடியாது

சம்பளத்தை நினைத்தைப்படி அதிகரிக்க முடியாது

அரச ஊழியர்களின் சம்பளத்தை நினைத்தைப்படி அதிகரிக்க முடியாது. அரச ஆதாயத்தை அதிகரிக்காமல் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வருமானத்தை அதிகரிக்காது சம்பளத்தை அதிகரிக்கவேண்டுமாயின், பணம் அச்சடிக்கவேண்டும். இல்லையேல் வெளிநாடுகளில் கடன்வாங்க வேண்டும். இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.

கனவு மாளிகைகள் கட்டப்பட்டால் நாடு மீண்டும் திவாலாகிவிடும்

கனவு மாளிகைகள் கட்டப்பட்டால் நாடு மீண்டும் திவாலாகிவிடும்

ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் நோக்கத்துக்கான கனவு மாளிகைகள் கட்டப்பட்டால் நாடு மீண்டும் திவாலாகிவிடும் - ஜனாதிபதி 

அதிக வருமானம் உள்ளவர்கள்

அதிக வருமானம் உள்ளவர்கள்

அதிக வருமானம் உள்ளவர்கள் புதிய வரிக் கோப்பினை திறக்கச் சொன்னார்கள், ஆனால் பலர் கேட்கவில்லை.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மக்கள் தவிக்கின்றனர்.தேசிய வளங்கள் என்று கூறி மக்கள் மீது சுமையை ஏற்றும் அரசியல் குழுக்கள் நாட்டை மீண்டும் பின்னுக்கு இழுக்கின்றன.

எதிர்கால அபிவிருத்தியை களவாட வேண்டாம்

எதிர்கால அபிவிருத்தியை களவாட வேண்டாம்

நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை களவாட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல் குழுக்கள் உள்ளன. நுவரெலியா தபால் நிலையத்தை அழிவடையும் நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றனர். இவை அனைத்தும் நுவரெலியாவின் சுற்றுச்சூழலையும் கட்டிடங்களையும் பாதுகாக்கவே செய்யப்படுகின்றன.

அதிக வசதிகள்

அதிக வசதிகள்

பொருளாதாரம் மீண்டு வரும்போது, ​​மக்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்படும்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

பில்லியன் ரூபாய் கடன் வசதி

பில்லியன் ரூபாய் கடன் வசதி

சிறு தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபாய் கடன் வசதிகளை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.

கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும்

கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும்

கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும். இதன் மூலம் இருபது லட்சம் குடும்பங்களுக்கு சொத்து கிடைக்கும். இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமை

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமை

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும். நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த முறைப்படி இந்நாட்டு மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்பு

பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்பு

இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்புக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய்

கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய்

கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள கிராமப்புற வீதிகள், மற்றும் ழுதடைந்த கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 5 ஆயிரத்தில் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்படும்.

பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது

பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது

நான்கு புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மாகாண சபைகள் ஊடாக பல்கலைக்கழகங்கள் அமையும். அவை எமக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். எமது நோக்கமானது எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது அல்லது மூன்று மடங்காக அதிகரிப்பதேயாகும்.

பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படும்

பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படும்

புதிய யுகத்திற்கு ஏற்றவாறு அரச பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த வேலைத்திட்டம் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். இதற்காக அடுத்த வருடத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

பாதுகாப்பு காப்பீட்டு முறை

பாதுகாப்பு காப்பீட்டு முறை

பாதுகாப்பு காப்பீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.

தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்

தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்

தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.அதற்கு முடிவெடுக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரங்கள் வழங்கப்படும்.

பல்கலைக்கழக கல்வியைப் பெறாத இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இதற்காக இலங்கை அறக்கட்டளைக்கு பயிற்சி நெறிகளுக்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

மருந்துகள் கொள்முதல்

மருந்துகள் கொள்முதல்

மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க தனி நிறுவனம் அமைக்கப்படும்.

இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சியை மற்ற நாடுகளின் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 75 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்னர் மேலும் நிதி ஒதுக்கப்படும்.

பதுளை வைத்தியசாலைக்கு இதயம் மற்றும் நுரையீரல்  புத்துயிர் பெறும் பிரிவு வழங்கப்படும். அதற்காக முந்நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை

சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை

சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமானது பயிர்களை பல்வகைப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான விவசாய நடவடிக்கைகளுக்காக மூன்று லட்சம் ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது

பால் பண்ணை உற்பத்தி

பால் பண்ணை உற்பத்தி

பால் பண்ணை உற்பத்தியை லாபகரமான நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக எதிர் நிதிக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தினசரி பால் உற்பத்தியை நாளொன்றுக்கு இருபது மில்லியன் லிட்டராக அதிகரிப்பதே எங்களின் நோக்கம்.

கொழும்புத் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

கொழும்புத் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

கொழும்புத் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அந்த தோட்டங்களில் வீட்டுத் தொகுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. கட்டுமான நிறுவனங்களுக்கு காணிகளை வழங்கும் மக்களுக்கு அந்த கட்டுமான வாளாகத்தில் வசிக்க இடம் வழங்கப்பட வேண்டும்.

பாலின அடிப்படையிலான சட்டங்கள்

பாலின அடிப்படையிலான சட்டங்கள்

பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படுகிறது.

மீள்குடியேற்றம்

மீள்குடியேற்றம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது

காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை

காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை

காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

பண்டாரவளைக்கு 250 மில்லியன்

பண்டாரவளைக்கு  250 மில்லியன்

பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

கண்டி பௌத்த நாகரிக அருங்காட்சியகத்திற்கு அடுத்த வருடத்துக்கு இருநூறு மில்லியன் பயன்படுத்தப்படும்.

இலங்கையில் கிரிக்கெட் நெருக்கடி

இலங்கையில் கிரிக்கெட் நெருக்கடி

இலங்கையில் கிரிக்கெட் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாகாணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்னுரிமை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை.

புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களை அண்மித்த ரயில் நிலைய நகரங்களை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை.

2025 ஆம் ஆண்டிலிருந்து, மாகாண சபை வருமானத்தில்

2025 ஆம் ஆண்டிலிருந்து, மாகாண சபை வருமானத்தில்

2025 ஆம் ஆண்டிலிருந்து, மாகாண சபை வருமானத்தில் சுமார் ஐம்பது வீதத்தை தொடர் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் மேலதிக வருமானத்தை மூலதனச் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் வழங்க 80 சதவீத நிதியுதவி

சம்பளம் வழங்க 80 சதவீத நிதியுதவி

ஹிகுரகொட சர்வதேச விமான நிலையம் அடிப்படை வேலைகளுக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கட்டுகஸ்தோட்டை வரை அமைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது

ஜனவரி 1ம் திகதி முதல் நகர சபைகளில் சம்பளம் வழங்க 80 சதவீத நிதியுதவி வழங்கப்படும்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கி

அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கி

அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளின் இருபது சதவீத பங்குகள் மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

கடன் பெறுவதற்கான வரம்பு

கடன் பெறுவதற்கான வரம்பு

கடன் பெறுவதற்கான வரம்பு 3900 பில்லியன் ரூபாயிலிருந்து 7350 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும்

வாடகை வசூலிப்பது

வாடகை வசூலிப்பது

நகர்ப்புறங்களில் வாழும்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

சுங்கச் சட்டங்களை நவீனமயமாக்க நடவடிக்கை

சுங்கச் சட்டங்களை நவீனமயமாக்க நடவடிக்கை

இலங்கையின் சுங்கச் சட்டங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை தொடர்பான புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

மாகாண சுற்றுலா சபைகளின் அபிவிருத்திக்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகில் 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு

கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகில் 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு

காலநிலை மாற்ற ஆணைக்குழுவை விரைவில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், பணம் செலுத்தும் முறைகள், நிதி வருவாய் மற்றும் பணியாளர் நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய கிக் பொருளாதாரம் மற்றும் மின்-வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு எளிய கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகில் 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு.

250 மில்லியன் ஒதுக்கீடு

250 மில்லியன் ஒதுக்கீடு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் 250 மில்லியன் ஒதுக்கீடு

வாசித்து முடித்தார் ஜனாதிபதி

வாசித்து முடித்தார் ஜனாதிபதி

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவை வாசித்து முடித்தார் ஜனாதிபதி

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.