இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... வெளியான தகவல்
சுற்றுலாப் பயணிகள்: 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிசெம்பர் மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 200,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களில் நாடு பதிவு செய்த மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
டிசெம்பர் 01 மற்றும் 28 க்கு இடையில் 1,476,951 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) முன்னர் வெளியிட்ட வாராந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி 01 மற்றும் டிசெம்பர் 28 க்கு இடையில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 1.5 மில்லியனை நெருங்கி 1,466,556 ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எட்டுவதே ஜனவரியில் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கு என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.