இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
'புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அத்துடன், மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.