தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு? பொருட்களின் விலை குறையுமா?
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விட பொருட்களின் விலைகளைக் குறைப்பது சிறந்ததாகும்.
அதனை விடுத்து சம்பளத்தை அதிகரிப்பதாயின் அரச உத்தியோகத்தர்களது சம்பளம் மாத்திரமின்றி, தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். சரியாக நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்கான யோசனையையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
எமது பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோமே தவிர, பொதுஜன பெரமுன சார்பில் வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த வரவு - செலவுத் திட்டம் மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.