Breaking News: படகு கவிழ்ந்ததில் வெளிநாட்டவர் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர்
படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன படகின் உரிமையாளரான மாரவில - வடக்கு முத்துகட்டுவைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ என்பவரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர்.
சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு - வெளியான தகவல்
மாரவில - சிலுவை தேவாலயத்திற்கு அருகில் இருந்து இவர்கள் சென்றுள்ளதுடன், மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது.
படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.