10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் அபார வெற்றி! இலங்கை அணி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது இலங்கை.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ஆலிப் போப் 154 ரன்கள் எடுத்தார், பென் டக்கட் 86 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 13 ரன்கள், ஹாரி புரூக் 19 ரன்கள் ஜிம்மி ஸ்மித் 16 ரன்கள் என மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அதன் பின்னர் இலங்கை அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்தது. நிஷாங்கா 64 ரன்கள், கேப்டன் தனஞ்செய் செல்வா 69 ரன்கள், மற்றும் குசல் மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்து சிறப்பித்தனர்.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை பவுலர் லகிரு குமாரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி வெற்றியை 40.3 ஓவரில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
நிசாங்கா அபாரமாக விளையாடி 127 ரன்கள் சேர்த்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் திறமையான பேட்டிங் இலங்கை அணிக்கு முக்கிய வெற்றியை வழங்கியது.
இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனைப் படைத்த இந்த வெற்றியால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.