இலங்கையில் பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது

ஜுலை 10, 2023 - 19:29
இலங்கையில் பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

தரவுகளின்படி இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக நேபாளம் உள்ளதுடன், அங்கு ஆண்டு தோறும் 35 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25ஆக காணப்படுகிறது.

அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகள் என அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கைக்கு கூடுதலாக, பங்களாதேஷ் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. பங்களாதேஷில் ஆண்டுதோறும் 22 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரியவருகிறது.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் 10 - 13 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெக்சிக்கோ 8 பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்த பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!