வயதை மாற்றிக்கொண்ட தென் கொரிய பிரஜைகள்!
ஒரு குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போதே, குழந்தையின் வயது எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.

யூன் சுக் யோல்ட் தலைமையிலான தென் கொரியா அரசு, சர்வதேச அளவிலான வயது கணக்கீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி, இனி தென் கொரியாவில் தமது பிறந்த நாளன்றே அனைவருக்கும் வயது அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபட்டே காணப்பட்டது. அவர்களின் வயதை கணக்கிட அவர்கள் இரு முறைகளை கையாண்டு வந்தனர்.
ஒரு குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போதே, குழந்தையின் வயது எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
அடுத்து ஜனவரி முதலாம் திகதியை அவர்கள் கடக்கும் போதே அவர்களுக்கு ஒரு வயது கூடி விடுகிறது. அந்நாட்டில் வயது கூட்டுவதில் பிறந்த திகதி கணக்கில் கொள்ளப்படமாட்டாது.
இந்நிலையில், இந்த முறைகளை நீக்கி, தற்போது சர்வதேச அளவிலான வயது கணக்கீட்டு முறையை தென் கொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த புது முறைமையை சுமார் 70 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொண்டு, தமது வயதை மாற்றியுள்ளனர்.