வெளியேறுகிறது பங்களாதேஷ்... தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி
அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் 23வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் மார்க்கரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ஹெண்ரிக்ஸ் 12 ரன்கள் வெண்டர் டூசன் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஏய்டன் மார்க்கரம் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். தொடக்க வீரராக களமிறங்கிய விட்டது.குயிண்டன் டி காக் 140 பந்துகளின் 174 ரன்கள் விளாசினார்.
இறுதியில் கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட் தளத்திற்கு 382 ரன்கள் எடுத்தது.
383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது.
டன்சித் ஹசன் 12 ரன்களிலும் லிட்டன் தாஸ் 22 ரன்களிலும் நஜ்முல் ஹுசைன் டக் அவுட் ஆகியும் கேப்டன் சாகிபுல் ஹசன் ஒரு ரன்னிலும், முஸ்பிக்கூர் ரஹீம் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 58 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஹம்மதுல்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது சதத்தை முகமதுல்லா பதிவு செய்தார். பங்களாதேஷ் அணி 152 ரன்கள் எல்லாம் சுருண்டு இருக்க வேண்டும். ஆனால் முகமதுலாவின் அபரா ஆட்டத்தால் 233 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை தொட்டது.
எனினும் தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது.