சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

2025 சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணை பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.