நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
‘தரமற்ற’ மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத் துறை பலவீனமடைந்து உயிரிழப்புகள் கூட ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அவசரகால நிலை எனக் கருதி கொள்முதல் மற்றும் பதிவு செயல்முறைக்கு வெளியே தொடர்புடைய ‘தரமற்ற’ மருந்துகளை அரசாங்கம் தொடர்ந்து கொண்டு வந்ததாகவும், இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது.