மதிய உணவில் மட்டைத்தேள்; உணவகத்துக்கு சீல்வைப்பு

சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மே 29, 2024 - 13:20
மே 29, 2024 - 13:22
மதிய உணவில் மட்டைத்தேள்; உணவகத்துக்கு சீல்வைப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளருக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது கட்டளை வழங்கினார். 

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!