மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

ஜுன் 2, 2025 - 12:08
மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சீமரகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் மின்சாரம் தாக்கி புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் சீமரகம, கோட்டத்தீவைச் சேர்ந்த 16 வயதுடையவர்.

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!