நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜுலை 24, 2024 - 20:04
ஜுலை 24, 2024 - 21:05
நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலை 11 மணி அளவில் ஊழியர்கள் உள்பட 19 பேருடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் தீ பற்றிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். 

முதற்கட்டமாக விமான விபத்தில் சிக்கிய 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விமான ஓட்டி 37 வயதான மனிஷ் ஷக்யா மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

சவுரியா விமான நிறுவனத்தின் plane 9N-AME (CRJ 200) என்ற விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தை தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

விமானம் பறக்க தயாரான போது ஓடுதளத்தில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!