சனி பெயர்ச்சி 2025: பாடாய் படப் போகும் ராசிகள்... உங்க ராசி என்ன?

சனியின் பெயர்ச்சி 12 ராசிகள் உட்பட உலகத்தையே பாதிக்கும். கும்ப ராசியில் இருந்து வெளியேறி சனி மீனக்குள் நுழைவார். இங்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் சனி வசிப்பார்.

மார்ச் 30, 2025 - 11:42
சனி பெயர்ச்சி 2025: பாடாய் படப் போகும் ராசிகள்... உங்க ராசி என்ன?

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனியின் பெயர்ச்சி 12 ராசிகள் உட்பட உலகத்தையே பாதிக்கும். கும்ப ராசியில் இருந்து வெளியேறி சனி மீனக்குள் நுழைவார். இங்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் சனி வசிப்பார்.

ஜோதிடத்தின் படி மார்ச் 29, சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிகழ்வு மார்ச் 29 அன்று இரவு 10:07 மணிக்கு நிகழ்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பிரச்சினைகள் வரும். செலவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி நிதி நிலை மோசமடையலாம். பரம்பரை சொத்துக்களை பெறுவதில் சிக்கல் பெறலாம். குடும்பத்தில் ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். கடன்களை அடைப்பதில் சிக்கல் நேரிடும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் குடும்பம் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். ரியல் எஸ்டேட் அல்லது சொத்து விஷயங்களில் பெரிய மாற்றங்கள் அல்லது புதுப்பித்தல்களைச் செய்யலாம்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல் ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வருமான குறையும். முதலீடுகள் செய்யும் முன் கவனமாக இருக்கவும்.

மீனம் - சனி பெயர்ச்சி மீன ராசியில் தான் நடக்க போவதால் இதனால் மீன ராசிக்காரர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படலாம். வேலையில் அதிக பொறுப்புகளைப் பெறலாம். 

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!