சனிபகவானின் அருளை பெற 10 பரிகாரங்கள் – ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்பில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஏழரை நாட்டு சனி காலம் உள்ளிட்ட சனியின் நிலைகள், எல்லோருக்கும் கடுமையான சிக்கல்கள் உருவாகும் என்று கூற இயலாது. மற்ற கிரக நிலைகளை பொருத்தும் பலன்கள் மாறுபடக்கூடும்.

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி 2025 என்பது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காரணம், சனி பகவான் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை அளிக்கிறார். அதனால் தான் ஏழரை சனி, அஷ்டம சனி, சனி தோஷம் போன்ற காலங்கள் பிறக்கின்றன.
2025 சனி பெயர்ச்சி – யாருக்கு என்ன பாதிப்பு?
கடந்த 2025 மார்ச் 29 அன்று சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதன் காரணமாக:
-
மீன ராசி – ஜென்ம சனி தொடக்கம்
-
கும்ப ராசி – பாத சனி தொடக்கம்
-
மேஷ ராசி – விரய சனி ஆரம்பம்
-
சிம்ம ராசி – அஷ்டம சனி நிலை
இவை சிக்கல்கள், மன அழுத்தம், நிதிசிக்கல், போன்ற பலவிதமான விளைவுகளை தரக்கூடும் என நம்பப்படுகிறது. ஆனால், எல்லோருக்கும் அதேபடி கெடு பலன் ஏற்படும் என்பதில்லை. இனிமேலும் சனி பகவான் அருள்புரிய சில எளிய பரிகாரங்கள் உள்ளன.
சனிபகவானின் அருளை பெற உதவும் எளிய பரிகாரங்கள்
1. சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும் விரதம் இருப்பதும் நன்மை பயக்கும்.
2. சனிக்கிழமை விரதம் இருந்து சனி சாலிசா மற்றும் சனி சோஸ்திரம் படிப்பதும் சனி பகவான் அருளை பெற உதவும்.
3. கருணை மனம் படைத்தவர்களை சனி பகவான் படுத்த மாட்டார். எனவே உனக்கு அன்னதானம் வழங்குதல், ஆடைகளை தானம் செய்தல் ஆகியவை பலன் தரும்.
4. சனி பகவானுக்கு உகந்த கருப்பு எள் மற்றும் நல்லெண்ணெய் தானம் செய்தால் பலன் தரும்.
5. பகவான் ராம பக்தன் அனுமானை வணங்குவதும், ஏழரை நாட்டு சனி பாதிப்பை குறைக்க பெரிதும் உதவும்.
6. கோளறு பதிகம் என்னும் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது, சனிபகவான் மட்டுமல்லாது, மற்ற கிரக நிலைகளின் பாதிப்புகளில் இருந்தும் விடுபட உதவும்.
7. அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று, அவர்களுடன் அன்பாக பழகி, அவர்களுக்கான உதவியை செய்வதும் கெடு பலன்கள் குறைய உதவும்.
8. கடின உழைப்பாளிகளை சனி பகவான் சோதிப்பதில்லை.
9. ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள், உங்களிடம் பணிபுரிபவர்கள் ஆகியோரை அவமானப்படுத்துவது, மனம் புண்படச் செய்வது ஆகியவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது.
10. பொய்கள் சொல்வதை தவிர்ப்ப வேண்டும். கெட்ட எண்ணங்களை விலக்கி வைக்க வேண்டும்.