நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் 

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. 

ஆகஸ்ட் 20, 2023 - 19:41
நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் 

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. 

நிலவின் தென் துருவத்தில் அந்த விண்கலத்தை தரையிறக்கி அங்கிருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நாளை தரையிறங்கவிருந்த லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

லூனா 25 விண்கலம் தொடர்பை இழந்த நிலையில் 19, 20ல் இணைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்த நிலையில் நிலைவில் விழுந்து நொறுங்கியுள்ளது. 

இதன்மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷியா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனிடையே சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ஆக.23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது. 

ரஷிய விண்கலம் தோல்வியால் நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!