பிரிட்டன் கடற்பரப்பை அணுகிய ரஷ்ய ‘யாண்டார்’ உளவு கப்பல்: ஸ்காட்லாந்து வடக்கில் பிரிட்டிஷ் கடற்படை கண்காணிப்பு அதிகரிப்பு
பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்து அருகே இது கண்டறியப்பட்டதாகவும், ஆண்டின் இதுவே இரண்டாவது தடவையாக ரஷ்ய உளவு கப்பல் பிரிட்டன் பரப்புக்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டவுனிங் தெருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹீலி, யாண்டார் கப்பலின் இருப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டார். இதன் பின்னணியில், ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் பிரித்தானிய கடற்படை படைகள் நிலைநிறுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நீருக்கு அடியில் உள்ள கேபிள்களை வரைபடமாக பதிவு செய்யவும், உளவுத் தகவல்களை சேகரிக்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் என்பதால், அதன் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, இந்த அடிக்கடலில் உள்ள கேபிள்கள் நாட்டின் தொலைத் தொடர்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளின் முதுகெலும்பு என்பதால், ரஷ்ய கப்பலின் அசைவுகள் கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகின்றன.