பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் தனது இராஜினாமா உரையை நிகழ்த்திய ரிஷி சுனக், தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா உரையை "மன்னிக்கவும்" என்று கூறி தொடங்கிய ரிஷி சுனக் புதிய பிரதமராகப் பதவியேற்கும் சர் கீர் ஸ்டார்மருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.