கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் பின்வரும் காரணிகளுக்காக வெளியேற்றப்படலாம்
கனடாவின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கு தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனடா சமூகம் ஏற்றுக்கொள்ளாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது.
இதயும் படிங்க: இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!
பின்வரும் காரணிகளுக்காக புலம்பெயர்ந்த ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்படலாம்.
கனடாவில் பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை செய்வதால் புலம்பெயர்ந்த ஒருவர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம். உதாரணமாக ஆள்கடத்தல் அல்லது கொலை போன்ற குற்ற செயல்களுக்கு இவ்வாறான தண்டனை கனடாவில் வழங்கப்படுகின்றது.
துப்பாக்கியை பயன்படுத்தாமல் 5,000 கனேடிய டொலருக்கு மேற்பட்ட பணத்தை ஒருவர் கொள்ளையடித்தல் என்பது கனடாவில் வதிவிட தகுதியை மீளப்பெறும் ஒரு குற்றச்செயல் ஆகும். அதேவேளை, துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திருட்டு மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகின்றது.
அத்துடன், பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து தப்பிக்க முயல்வதும் கனடாவில் வதிவிட தகுதியை கேள்விக்குறியாக்கும் குற்றச்செயலாக உள்ளது.
இதயும் படிங்க: வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை
மதுபோதையில் அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்துவது கனடாவில் இருந்து குடியேற்றவாசி ஒருவரை அந்நாட்டிலிருந்து அகற்றக்கூடிய மற்றுமொரு குற்றச்செயலாகும்.
மற்றுமொரு பிரதான காரணியாக போதைப்பொருள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் விநியோகம் உள்ளது.
கனடா அரசானது மேற்குறிப்பிட்ட குற்றச்செயலுக்கு 2018ஆம் ஆண்டு முதல் கடுமையான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.
மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் புலம்பெயர்ந்தோரின் வதிவிட தகுதியை இழக்க செய்யும்.