சனத் நிஷாந்த வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி ரணில் மற்றும் மஹிந்த 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 25, 2024 - 21:49
சனத் நிஷாந்த வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி ரணில் மற்றும் மஹிந்த 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க உள்ளிட்டவர்களும் சனத் நிஷாந்தவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன், இன்று மாலை 6 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை அவரின் பூதவுடன் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா பொது முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஆராச்சிக்கட்டுயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளனர்.

சனத் நிஷாந்தவின் மரணத்தின் பின்னர் இன்று அதிகாலை முதல் அமைச்சர்கள் பலரும் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள ராகம வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிளும் உயிரிழந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!