அநுரவின் சவாலை ஏற்றுக்கொண்டார் ரணில்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 11, 2024 - 14:47
அநுரவின் சவாலை ஏற்றுக்கொண்டார் ரணில்

பொருளாதாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஒருமித்த கருத்துக்கு வந்தால், அநுரகுமார திஸாநாயக்கவின் விவாதத்துக்கான சவாலை ஏற்றுக் கொள்ளத் தயார் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அறிவித்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடலை ஆரம்பிக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இப்போது விவாதத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். நான் எப்படி விவாதத்திற்கு வருவது? நீங்கள் முதலில் ஏற்றுமதி பொருளாதாரமா? இறக்குமதி பொருளாதாரமா? என்பதை எங்களிடம் கூறுங்கள். அதைத் தெரிவித்த பிறகு, அவரும் நானும் ஐஎம்எஃப் மேலாளரும் கலந்துரையாடுவோம். வேண்டும் என்றால் சஜித்தையும் வரச் சொல்லுங்களேன்" ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுவதாக அண்மையில் (08) நடைபெற்ற மக்கள் பேரணி ஒன்றில் உரையாற்றும் போது அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!