டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் முயற்சிகள் சூடுபிடிப்பு!

டிக்டாக் செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் அமெரிக்காவில் சூடுபிடித்துள்ளன.

ஏப்ரல் 20, 2024 - 11:44
டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் முயற்சிகள் சூடுபிடிப்பு!

டிக்டாக் செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் அமெரிக்காவில் சூடுபிடித்துள்ளன.

டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் சீனாவின் Byte-Dance நிறுவனத்தின் உரிமப் பங்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்கவிருக்கிறது.

உக்ரேன், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தொகுப்புத் திட்டத்துடன் டிக்டாக் விலக்கல் சட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது அமெரிக்க நாடாளுமன்றம் இன்று (20 ஏப்ரல்) வாக்களிக்கும்.

டிக்டாக்  தடைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், செனட் சபையிலும் அது துரிதமாக நிறைவேற்றப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

அது நிறைவேற்றப்பட்டால், ByteDance நிறுவனம் 6 மாதங்களுக்குள் TikTokஐ விற்றாக வேண்டும் அல்லது அது தடையை எதிர்கொள்ள நேரிடும்.

அமெரிக்காவின் அந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்று டிக்டாக் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!