புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான 02ஆவது மின் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அத்படி, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் ஜூலை 08ஆம் வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், பொது கலந்தாய்வுக்கான வாய்மொழி அமர்வு, ஜூலை 09ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த பொது கலந்தாய்வு முடிந்த பின்னரே, இறுதி கட்டண முடிவை ஜூலை 15ஆம் திகதியன்று ஆணையம் அறிவிக்கவுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு: https://www.pucsl.gov.lk/notices/stakeholder-consultation-02nd-electricity-tariff-revision-2024/