கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமான், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்படவுள்ளார். 

செப்டெம்பர் 25, 2024 - 16:59
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாயக்க நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் இன்று (25) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார் என அத்தகவல் குறிப்பிடுகின்றது. 

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமான், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்படவுள்ளார். 

பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) பயின்றார். 

மேலும், ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 

1996 ஓகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து, 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார்

2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. 

ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார். 

இவர் சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்படுகிறார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!