அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி ரணில் உரை

பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

ஜனவரி 19, 2024 - 16:15
ஜனவரி 19, 2024 - 16:18
அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி ரணில் உரை

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உரையாற்றவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் (NAM) தலைவர்களின் 19ஆவது உச்சி மாநாடு உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்றும் (19) நாளையும் (20) நடைபெற உள்ளது.

'பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்' என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) பிற்பகல் உகண்டாவின் கம்பாலா நகருக்கு சென்றிருந்தார்.

அங்கு அந்நாட்டு காணி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ருத் நென்கெபெரிவா (Ruth Nankabeirwa) ஆகியோரால் ஜனாதிபதி தலைமையிலான 
தூதுக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!