சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த விஜயத்தில், கொழும்பு துறைமுக நிதி நகரத்துக்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதிக்கான நிதியை மீளப்பெறுதல் ஆகியவற்றில் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஹம்பாந்தோட்டை சுத்திகரிப்புத் திட்டத்துக்கான சீன முதலீடுகள் குறித்தும் சீன இலங்கைத் தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள், இது நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.