3 மணித்தியால மின்வெட்டு; வெளியான தகவல்
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை கூறியுள்ளது.

சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்துக்கு நீர் விநியோகிக்கப்படுமானால், தென் மாகாணத்தில் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை கூறியுள்ளது.
இந்த சந்திப்பு விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
உடவளவ நீர்த்தேக்கத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான நீரை சமனல வாவியிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய, மகாவலி, நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் அமைச்சர் இங்கு கலந்துரையாடினார்.
அவ்வாறு நீர் வழங்கப்படுமானால், தற்போதுள்ள நீர் மட்டம் மேலும் குறைவடைவதால் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.