இன்றும் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (11) சுமார் 90 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
1987 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வாடிக்கையாளர் கணக்கு இலக்கத்தை குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதன் மூலம் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை அறிந்து கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று நாடு முழுவதும் 90 நிமிடம் மின் தடை ஏற்பட்டது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்வட்டத்துடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.