வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.

மல்வத்து ஓயா பள்ளத்தாக்குக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி மல்வத்து ஓயாவின் மேல் மற்றும் நடு நீரோடை பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாச்சதுவ நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது வினாடிக்கு 3,700 கன அடி வீதம் வெளியேறுகிறது.
வெங்கலச்செட்டிக்குளம், முசலி மற்றும் நானாட்டான் பிரதேச பிரதேசங்களுக்கு உட்பட்ட மல்வத்து ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.
இப்பிரதேசங்களில் வசிப்பவர்களும், வாகன சாரதிகளும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.