600 சதவீதம் வரை வாகன வரி உயர வாய்ப்பு – வெளியான புதிய தகவல்
வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.
வாகன வரி விதிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியான நிலையில், அதில் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் கலால் வரி சதவீதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் கூறியுள்ளார்.
வாகனங்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய இறக்குமதி வரி சுமார் 300 வீதம் என்ற நிலையில், அது 400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி, செலவு, காப்பீடு மற்றும் சரக்கு வரி மற்றும் தற்போதுள்ள 18 வீத வட் உட்பட பல அடுக்கு வரிவிதிப்புகளைக் கணக்கிட்ட பிறகு ஒரு வாகனத்தின் இறுதி விலை தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொது மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும், அண்மையில் வெளியிட்டப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பானது இறுதி வாகன வரியைக் குறிக்கவில்லை என்பதை அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய வாகன சந்தையை விட விலை சற்று அதிகமாக இருக்கும் எனவும் சுமார் ரூ.1.6 மில்லியனாக இருந்தத வேகன் ஆரின் வரி, எனினும் புதிய திருத்தத்தின் மூலம் ரூ.1.8 மில்லியனை தாண்டக்கூடும்.
அத்துடன், சுமார் ரூ.2 மில்லியனாக இருந்த விட்ஸ் வகை காரின் இறக்குமதி மீதான வரி சுமார் ரூ.2.4 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என்றும், டொயோட்டா அக்வா, கொரோலா மற்றும் ஆக்சியோ மொடல்களுக்கான வரி 6.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.